Published On: Tuesday, February 14, 2012
காதலனைக் கொன்ற காதலிக்கு காதலர் தினத்தில் மரண தண்டனை

ஆண் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக ஹெட்டிமுல்ல பெண் ஒருவருக்கு கேகாலை மேல் நீதிமன்றம் இன்று காதலர் தினத்தில் மரண தண்டனை விதித்துள்ளது. 2006ஆம் ஆண்டு பெப்ரவரி 07ஆம் திகதி காதலனுக்கு அசிட் வீசிக் கொன்றதாக குறித்த பெண் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
குறித்த பெண் இரு நபர்களுடன் கள்ளத் தொடர்பைப் பேணி வந்துள்ளார். அதில் ஒருவருக்கு அசிட் வீசி கொலை செய்துள்ளார். அசிட் தாக்குதலுக்குள்ளானவர் உயிரிழப்பதற்கு வாக்குமூலம் அளித்திருந்தார். இதனைப் பரிசீலித்த கேகாலை மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர மேற்படி பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.