Published On: Friday, February 24, 2012
அம்பாரை மாவட்டத்தில் உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு
(எப்.எம்.முர்தளா)
அம்பாரை மாவட்டத்தில் 2011/ 2012 பெரும்போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகளிடமிருந்து உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்யும் ஆரம்ப வைபவம் நேற்று வியாழக்கிழமை அக்கரைப்பற்று நெற்களஞ்சியசாலையில் இடம்பெற்றது. நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிராந்திய முகாமையாளர் ஆர்.எம்.ஏ.ரத்தினாயக்கா பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்நிகழ்வினை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் உள்ளுராட்சி மாகாண சபைகள அமைச்சர் அதாஉல்லாவின் இணைப்புச் செயலாளர் ஏ.பி. தாவுத், அக்கரைப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளர் ஐ.எல்.ஏ.ஹக்கீம், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி. ஜெகதீஸன், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.வை. சலீம், உதவிச் செயலாளர் ஏ.எல்.அஸ்மி, கல்லோயா வலதுகரை வாய்க்கால் விவசாய சம்மேளனத்தின் தலைவர் எம்.ஏ. அபூபக்கர் உட்பட மற்றும் பல கலந்து சிறப்பித்தனர்.

