Published On: Monday, February 06, 2012
அட்டாளைச்சேனை பிரதேச கலாசார விழா
(நிஸார் ஜமால்தீன்)
அட்டாளைச்சேனை பிரதேச கலாசார விழா பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் அறபா வித்தியாலய கூட்ட மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது பெற்ற கலைஞர் எஸ்.ஏ.ஜெலில், கலாபூஷணம் விருது பெற்ற கவிஞர்களான ஆசுகவி அன்புடீன், எம்.எல்.எம்.பாறூக், ஐ.எல்.ஆதம்லெப்பை மற்றும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா, பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ் அவர்களினால் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரின் மக்கள் தொடர்பு செயலாளர் எம்.எஸ்.எம்.ஜஃபர், சமூக சேவை உத்தியோகத்தர் அமீன் உட்பட உயர் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.