எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Friday, July 18, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Monday, February 06, 2012

புலமைப் பரிசில் வழிகாட்டி 02

Print Friendly and PDF


(இங்கு வெளியிடப்படும் விடயங்கள் துருவம் இணையத்தளத்தின் முழுப்பதிப்புரிமை உடையது. இதனை அனுமதியின்றி ஏனைய ஊடகங்களில் பிரசுரிப்பது சட்டவிரோத செயலாகும்) 


(புலமைப் பரிசில் வழிகாட்டி 01 இன் தொடர்ச்சி...)
பாகம் - 02

குறிப்பு: விடைகள் சிவப்பு அடையாளமிடப்பட்டுள்ளன.

(1) பிரதியீடு (SUBSTITUTION) :- அதாவது ஒரு விடயத்தின் குறியீடு. நிலமை, செயற்றிறன் என்பனவற்றிக்கு மாற்றீடாக வேறொரு விடயத்தின் குறியீடு, நிலைமை செயற்பாட்டுத்திறன் ஆகியவற்றை இனங்கண்டு தெரிவதாகும்.

உதாரணமாக ஒருவிடயம் குறியீட்டுவடிவில் அல்லது எழுத்துக்கள், படங்களாகத் தரப்படும். அதனை அவதானித்து அதன் திசை, போக்கு, பாதை வடிவம், மாறுபடும் தன்மை. பிரிபடும் தன்மை போன்றவற்றை அவதானித்து விடைகளை அளித்தல் வேண்டும். 

1) பொருத்தமற்ற உருவை தெரிவு செய்க.

                    1.                                                         2.                                                   3.

பொருத்தமான விடையை விடையின் கீழ் கோடிடுக.
2) குருவி விகுதி திக்கு ..............
1. குதிரை
2. விசிறி
3. திடல்

(2) வரைவிலக்கணம் (INTERPRETATION) : அதாவது ஒரு நிகழ்வை, ஒரு சந்தர்ப்பத்தை, செயற்பாட்டை அல்லது ஒரு தரவினை வரைவிலக் கணப்படுத்துவது அல்லது விளக்கும் ஆற்றலை மதிப்பிடுவதாகும்.

உதாரணமாக ஒருவிடயத்தின் கருத்தை நேரடியாக கூறுவதாகும். அல்லது நிகழ்விற்கான சந்தரப்பத்தை அல்லது அதற்கான தரவுகளின் அடிப்படையில் வரைவிலக்கணம் கூறுவதாக அமையும்.

1) மழைபெய்யும் போது வானத்தில் 
1. கரு மேகங்கள் காணப்படும்
2. நீல மேகங்கள் காணப்படும்
3. வெண்மையாக காணப்படும்.

2) சாடிகளில் வளர்ப்பார்கள். பல இதழ்களைக் கொண்டிருக்கும். பற்பல நிறங்களிலும் காணப்படும். மெல்லிய மணம் மணக்கும். பார்ப்பதற்கு அழகாக காட்சிதரும். அதன் கீழ் தண்டுப்பகுதியில் முள் காணப்படும். 
1. றோஜாப்பூ
2. தாமரைப்பூ
3. செவ்வருத்தைப்பூ

(3) எதிர்வுகூறல் (PREDICTION): அதாவது கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள், தரவுகள் போன்றவற்றை மையமாகக் கொண்டு எதிர்காலத்தில் நிகழத்தக்கதான ஒரு நிலைமையைப் பற்றி எதிர்வு கூறுதலாகும்.

உதாரணம், எண்கோலத்திற்கேற்ப விடை தருக.
1) 4, 8, 12, 16,  ...............,  ................
1. (20, 25)
2. (20, 24)
3. (18, 24)
2) நேற்று ஞாயிறுக்கிழமை நல்ல மiபெய்தது. இன்றும் மழை பெய்கிறது. ஆயின் நாளை 
1. மழைபெய்யாது
2. மழை பெய்யும்
3. எதுவும் கூறமுடியாது

(4) மொழியெர்த்தல் - (TRANSLATION) அதாவது ஒரு சொல்லின், ஒரு கூற்றின், ஒரு பீடத்தின், ஒரு வரைபின் கருத்தை பொருள் வேறுபடாத வகையில் மாற்றியமைத்தலாகும்.

உதாரணமாக,
பின்வரும சொற்களை வாசித்து சரியான விடையை எழுதுக.
1) கல்லை ......$...... சிப்பி கண்டனன்
  கண்ணைக் கவரும் சிற்பமாய்
  கல்லை மாற்றி அமைத்தனன்
  கண்ட மக்கள் போற்றினர். 

$ இக்குறியிடு உள்ள இடத்திற்குப் பொருத்தமான சொல்லைத் தெரிவு செய்க.
1. கவிஞன்
2. ஓவியன்
3. சிற்பி
2) அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்ற பழமொழிக்குரிய சரியான கருத்து
1. ஒற்றுமையே பலன்
2. விடாமுயற்சி பலன் தரும்
3. ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாது

(5) பிரச்சினைத் தீர்த்தல் - (PROBLEM SOLVING) அதாவது ஒரு மாணவன் தான் பெற்ற அறிவு, திறன், மனப்பாங்குகளைக் கொண்டு வேறொரு சந்தர்ப்பத்தில் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றபோது அதனைப் பயன்படுத்துதல்.

உதாரணமாக 
1) முதலிலுள்ள அடைப்பின் பெறுமதிக்குச் சமனான அடைப்பைத் தெரிவு செய்க.

                                                                    1.                                   2.                                3.

10 மாம்பழங்களின் விலைக்கு 5 தோடம்பழங்கள் வாங்கலாம். ஒரு தோடம்பழத்தின் விலை ரூபா 3  எனின் இரண்டு மாம்பழங்களின் விலை யாது?
1. ரூபா 4.50
2. ரூபா 4.00
3. ரூபா 3.00
(6) தொடர்படுத்தல் - (SEEING RELATIONSHIIPS) அதாவது ஒரு ஆள், ஒருபொருள், ஒருகூற்று, ஒரு சந்தர்ப்பம் ஆகியவற்றை வேறொரு ஆளுடன், பொருளுடன், கூற்றுடன், சந்தர்ப்பத்துடன் பொருத்தி ஒற்றுமை வேற்றுமைகளை இனங்காணுவதாகும்.

உதாரணமாக 
1) நாவிதன் ஆண்பிள்ளையாவான். அவனின் மாமாவான மதனுக்கு இரண்டு ஆண்குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உண்டு.
1. நாவிதனின் அம்மாவுக்கு மதன் சகோதரன் 
2. மதனின் சகோதரன் நாவிதனாவான்
3. மதனும், நாவிதனும் உறவினர்கள் அல்லர்.

2) அடைப்பினுள் தரப்பட்டவற்றைக் கொண்டு ஒரு அடைப்பு வேறுபட்டதாகும். அதன்கீழ் கோடிடுக.

                        1.                                                  2.                                                       3.

7) காரண காரியத்தை இனங்காணல் - (IDENTIFICATION OF CAUSE AND EFFECT) அதாவது ஓரு காரியத்தினது அல்லது ஒரு விடயத்தினது காரணத்தை இனங்காணல்.

உதாரணமாக 
   
1) இவ்வுருவை விபரிக்கும் சொற்கள் கொண்ட விடையை தெரிவு செய்க
1. அழகு, ஓட்டம், சோம்பறி
2. வேகம், அழகு, வீடு
3. வேகம், அழகு, கொம்பு
2) காகிதத்திற்கு வைக்கோல் போல ஆடைக்கு 
1. விதை
2. நூல்
3. மட்டை

(தொடரும்...)

Related News

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452