எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Thuruvam
துருவம்
செய்திகள் • உடனுக்குடன்
THURUVAM
NEWS
MENU
Published On: Monday, February 27, 2012

குடிசன வீட்டுவசதிகள் தொகைமதிப்பு கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்

Print Friendly and PDF

குடிசன வீட்டுவசதிகள் தொகைமதிப்பு கணக்கெடுப்பு இன்று திங்கட் கிழமை 27 ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 19 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.இதற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென குடிசன மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டீ.பீ.பி.சுரங்கனா வித்யாரட்ண வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேற்குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் வீடுகளுக்கு வரும் தொகைமதிப்பீட்டு அதிகாரிகள் மற்றும் கணக்கெடுப்பாளர்களுக்கு உண்மை யான தகவல்களை பொதுமக்கள் வழங்கவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர் மூன்று கட்டமாக மேற்கொள்ளப்படும் இந்தத் தொகைமதிப்பீட்டில் இரண்டு கட்டங்கள் பூர்த்தியடைந்திரு க்கும் நிலையில் உள்ளன. மூன் றாவது கட்டமாக தகவல்கள் சேகரிக்கும் கட்டமே இன்று ஆரம்பமாக வுள்ளது. நாட்டிலுள்ள 25 மாவட்ட ங்களிலும் 80 ஆயிரம் கணக்கெடுக் கும் உத்தியோகத்தர்கள் பணியாற்றவுள்ளனர்.

மாவட்ட செயலாளர்கள்- பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராமசேவர்களின் ஊடாக இந்தக் கணக்கெடுப்புக்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வீட்டு வசதிகள் பற்றிய தகவல்கள் இதில் திரட்டப்படவுள்ளன.இது தொடர்பாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தில் நபர்கள் தொடர்பான அடிப்படைத் தகவல்கள்  இடம்பெயர்வு பற்றிய தகவல்கள்- உடல் உள இடர்பாடுகள்  கல்வித் தகைமை  பொருளாதார நடவடிக்கை தொடர்பான தகவல்கள்- கருவளம் தொடர்பான தகவல்கள் என்பன கோரப்படவுள்ளன.

வரலாற்றில் முதன் முறையாக மதிப்பீட்டுப் பணிகளின் போது தேசிய அடையாள அட்டை இலக்கம் கோரப்பட்டிருப்பதுடன் வீடுகளில் இணையத்தளத்தினுள் நுழைவதற்குக் காணப்படும் வசதிகள் பற்றிய தகவல்களும் கோரப்பட்டுள்ளன.இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள் படிப்படியாக வெளியிடப்படும். முதற்கட்டமாக இலங்கையின் மொத்த சனத்தொகை பற்றிய தகவல்கள் வெளியிடப்படும். அதன் தொடர்ச்சியாக ஏனைய தகவல்கள் வெளியிடப்படும். திரட்டப்படும் தகவல்கள் எந்தவொரு வெளித் தரப்பினருக்கும் வழங்கப்படாது இரகசியமாகப் பேணப்படும் என்றும் குடிசன மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டீ.பீ.பி.சுரங்கனா வித்யாரட்ண மேலும் தெரிவித்தார்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452