Published On: Friday, February 10, 2012
இரண்டாவது தடவையாகவும் தாதியர்கள் நேற்று வேலைநிறுத்தம்
(ஐ.எம்.பாயிஸ்)
15 அம்சக் கோரிக்கையினை முன்வைத்து நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை தாதியர்கள் நேற்று வியாழக்கிழமை அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வைத்தியசாலை முன்றலில் இவர்கள், சீருடைக் கொடுப்பனவு, தொலைபேசிக் கொடுப்பனவு, 2009ஆம் ஆண்டின் 19ஆவது சுற்று நிருபத்தினை அமுல்படுத்து போன்ற கோரிக்கைகள் அடங்கிய சுலோகங்களை தாங்கி ஒரு மணிநேர கவனயீஈர்ப்பு போரட்டத்தில் ஈடுபட்டனர்.
அரச தாதியர் சங்கம் நாடளாவியரீதியில் 15 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் சுகாதார அமைச்சு இதற்கான உரிய பதிலை வழங்காததை அடுத்து இரண்டாவது தடவையாகவும் நேற்று வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.