Published On: Friday, February 10, 2012
(நிஸார் ஜமால்தீன்)
அம்பாறை மாவட்டத்திற்கான தகவல் வள நிலைய திறப்புவிழா அண்மையில் அம்பாறை மாவட்ட தபால் அத்தியட்சகர் அலுவலகத்தில் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட கிழக்கு மாகாண அஞ்சல் மா அதிபர் கே.கனகசுந்தரம் அம்பாறை மாவட்டத்திற்கான இணையத்தளத்தினை ஆரம்பித்துவைத்தார். அம்பாறை மாவட்ட தபால் அத்தியட்சகர் ஜே. டபிள்யு. ஜெகத்குமார, பிராந்திய நிர்வாக உத்தியோகத்தர் ரீ. தம்பி ஐயா, பிரதம நிர்வாக உத்தியோகத்தர் பீ.எஸ்.முஹம்மட் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.