எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Thuruvam
துருவம்
செய்திகள் • உடனுக்குடன்
THURUVAM
NEWS
MENU
Published On: Friday, February 24, 2012

தந்தையின் சித்திரவதையினால் 5 வயது சிறுவன் மரணம்

Print Friendly and PDF


தந்தை ஒருவரின் சித்திரவதையினால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளான். பண்டாரவளையைச் சேர்ந்த மகுல்லெல்ல பகுதியின் முஹம்மது காசிம் என்ற 5 வயது நிரம்பிய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். சிறுவனின் மரணத்தையடுத்து தலைமறைவான தந்தையை, பெரும் சிரமத்தின் மத்தியில் பண்டாரவளைப் பொலிஸார் கைதுசெய்து பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது, நீதிபதி அவரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

மேற்படி சிறுவனின் தாயார் மத்திய கிழக்கு நாடொன்றிற்கு வீட்டுப் பணிப் பெண்ணாக தொழிலுக்குச் சென்றுள்ளார். இதனால் தந்தையின் சகோதரியின் வீட்டில் தங்கியிருந்து மேற்படி சிறுவன் தந்தையின் பல்வேறு வகையிலான கொடுமைகளுக்கும் சித்திரவதைக்கும் உட்பட்டுள்ளதுடன், துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அச் சிறுவனுக்கு குளவிகள் கொட்டியதாகக் கூறி பண்டாரவளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் அங்கிருந்து தியத்தலாவை அரசினர் மருத்துவமனைக்கு உடனடியாக மாற்றப்பட்டார்.

வருத்தம் கடுமையானதினால் சிறுவன் விசேட அம்புலன்ஸ் மூலம் பதுளை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். பலமணிநேர சிகிச்சையின் பின்னர் சிகிச்சை பயனளிக்காமல் அச்சிறுவன் உயரிழந்தான். இச்சிறுவனுக்கு இச்சிறுவனின் ஆண் உறுப்புக்கள் மற்றும் பின்பகுதி கடித்து குதறப்பட்டுள்ளதுடன், உடம்பின் பல பகுதிகளில் சூடுபட்ட காயங்களும் காணப்பட்டதாக டாக்டர்கள் கூறினர். மேலும் இச்சிறுவன் படுமோசமான சிறுவர் துஷ்பியோகத்திற்கும் உட்படுத்தப்பட்டிருக்கின்றாரென்று தெரிய வந்துள்ளது. 

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452