Published On: Friday, February 24, 2012
(சர்ஜூன்)
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலைக்கு பொருளாதார அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் கட்டப்பட்ட 3 மாடிக் கட்டத்தின் திறப்புவிழா அண்மையில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் சுஜாதா தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைசர் பசில் ராஜபக்ஷ கலந்துகொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.
நகர விவகார சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி, பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, பசீர் சேகுதாவுத் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசாந் ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.