Published On: Sunday, February 19, 2012
அரசாங்கத்தின் விருப்பத்தினால் மக்கள்மீது வரிகள் பிரயோகிக்கப்படுவதில்லை

அரசாங்கத்தின் விருப்பத்தினால் மக்கள்மீது வரிகளை பிரயோகிப்பதில்லை என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எரிபொருட்களின் விலை அதிகரிப்பானது தற்காலிக நடவடிக்கை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
எரிபொருட்கள் விலை அதிரிப்பினால் நிவாரணம் கிடைக்கப்பட வேண்டிய சகல பிரிவுகளுக்கும் நிவாரணம் வழங்கப்படும் எனவும் மகிந்த ராஜபக்ஷ மஹர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.