Published On: Friday, March 02, 2012
மாணவியின் காதல், கர்ப்பம் கடைசியில் மரணம்

(பஹமுன அஸாம்)
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்து ஒரு அழகான கிராமம் தான் மொரவௌ எனும் கிராமம். இக்கிராமத்தில் அதிகமான மக்களின் ஜீவனோபாயமாக அமைந்தது சேனைப் பயிர்ச் செய்கையாகும். விடியும் ஒவ்வொறு பொழுதுகளும் மாலை மங்குவதற்குள் இம்மக்கள் தமது வாழ்வோடு படும் அவைஸ்தைகளும் துன்பங்களும் ஏகப்பட்டவை. அவ்வாறு கஷ்டங்களுடன் வாழும் இம்மக்களிடம் வானமளவு கனவுகள் இல்லாவிட்டாலும் அன்றாடம் குடும்பத்துடன் அன்றைய பொழுதை கழிக்க வேண்டும் என்ற ஆவல் அவர்களிடம் இல்லாமல் இல்லை.
யுத்தக் கெடுபிடிகளுக்குள் சிக்கி மீண்டெழுந்துள்ள மொரவௌ குணவர்தனபுரயில் பிறந்தவள் தான் தில்ஹானி குமாரி குணதிலக. 16 வயதான தில்கானி பள்ளிப் படிப்புக்கு வஞ்சனை காட்டாது ஆர்வமாக படித்தது நல்லதொரு எதிர்காலத்தைக் கணவில் பதித்துக் கொண்டே. கற்றல் விடயங்கில் மாத்திரமல்லாது ஏனைய துரைகளில் தில்கானி தனது திறமையை வெளிக்காட்டத் தவரியிருக்க வில்லை. பாடசாலை வாத்தியக் குழுவிழும் நடனக்குழுவில் தில்கானிக்கு சிறந்த இடம் இருந்தது.
இரவு வானில் முழு நிலவைப் போன்று பிரகாசமான முகத்தோடு துள்ளித் திரிந்த தில்ஹானியின் அழகை தினமும் உள்ளாத்தால் ரசித்துக் கொண்டிருந்தாள் தாய் மல்லிகா. 'எனது மகள் அழகாக இருக்கிறாள்', 'எப்படியாவது அவளை படிக்க வைக்க வேண்டும்', 'நாம் படும் கஷ்டங்களை அவள் படக்கூடாது' என்ற புலம்பல் மல்லிகாவிடத்தில் என்நேரமும் இருக்கத்தான் செய்தது. 16 வயதை எட்டியிருந்தபோதும் சிறு பிள்ளைக்கான வெகுளித்தனமும் குரும்புச் சேட்டைகளும் தில்ஹானியடம் இருக்காத்தான் செய்யதன.
2010 ஜுன் 27 ஆம் நாள். அது ஒரு பௌர்ணமி நாள் என்பதை உணர்த்தும் விதத்தில் கீழ் வானில் முழு நிலவு பிரகாசித்துக் கொண்டிருந்தது. அன்று போயா தினத்தில் அனுராதபுரத்துக்கு யாத்திரை செல்ல தில்ஹானியின் குடும்பத்தினர் முதலே ஆயத்தமாகியிருந்தார்கள். யாத்திரையில் சென்றவர்கள் திரும்பி வரும்போது 27ஆம் திகதி அதிகாலையாகி விட்டது. காலையில் அனைவரும் தத்தமது கெவலைகளுக்கு செல்ல ஆரம்பித்தனர். சாக்குப் போக்கு சொல்லாமல் ஏனைய நாட்களில் பாடசாலைக்குச் செல்லும் தில்கானி இன்று இன்னும் கட்டிலை விட்டு எழும்பில்லை. நேற்று பிரயாணம் சென்று வந்தது உடம்புக்கு முடியாமல் இருக்கும் என்று எண்ணிக் கொண்ட மல்லிகா, மகனை மாத்திரம் பாடசாலைக்கு அனுப்பிவைத்தார். இருந்தபோதும் கொஞ்ச நாட்களாக தனது மகளிடத்தில் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர மல்லிகா தவறவிடவில்லை.
எப்போதும் எதையோ யோசித்துக் கொண்டிருப்பாள். தனியாக எதையோ சொல்லிக் கொண்டிருப்பாள். இந்த விடயத்தை தனது கணவனிடத்திலும் சொன்னாள். 'பரீட்சை நெருங்குகிறது அல்லவா, அதை நினைத்து பயப்படுகிறாள் போல. கொஞ்சம் ஓய்வெடுத்தால் எல்லாம் சரிவரும்' என்றான் மல்லிகாவின் கணவன். தலை, கால் தெரியாமல் போர்வைக்குள் சுருண்ட கிடந்த தில்ஹானியின் உடம்மைத் தொட்டுப் பார்த்தாள் தாய் மல்லிகா. வெளியே தெரியும்படியாக உடம்பில் எந்த மாற்றமும் இல்லை. 'உடல் வலிக்குதம்மா, நான் இன்னக்கி ஸ்கூல் போகல்ல, நாளைக்கு போகிறேன்' என்ற தில்ஹானி மீண்டும் போர்வைக்குள் தஞ்சம் புகுந்தாள்.
அவ்வாறு கதைத்துவிட்டுத் திரும்பிய மல்லிகா அது தான் தனது மகளோடு பேசிய கடைசி வார்த்தைகள் என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை. இந்நிலையில் மகளை மாத்திரம் தனியாக வீட்டில் வைத்துவிட்டு சேனைக்குச் செல்ல மல்லிகாவுக்கு மனம் வரவில்லை. இருந்தாலும் அன்றைய நாள் வேலைக்குச் செல்லாவிட்டால் மறுநாள் பிள்ளைகளை பட்டினி போடவேண்டிவரும் என்பதால், பாதி உடைந்துள்ள கதவுகளை நன்றாக மூடிவிட்டு, 'மகள் கவனமாக இருங்க. பகல் சாப்பாட்டுக்கு முன்னர் நான் வந்துடுவன்' என்று கூறிவிட்டு மல்லிகா சேனைக்குச் செல்கிறார்.
சொன்னது போன்று ஓரிரு மணித்தியாலத்தில் மல்லிகா வீடு திரும்பினாள். இருந்தாலும் வீட்டில் தில்ஹானியைக் காணவில்லை. பக்கத்தில் எங்கேயாவது இருக்கிறாளா என்று பார்ப்பதற்காக வெளியே வந்து சத்தமாக கூப்பிட்டுப் பார்த்தாள் மல்லிகா. இருந்தும் அவளது அழைப்புக்கு எந்த பிரதிபலனும் கிடைக்கவில்லை. மல்லிகாவின் உள்ளத்தில் அச்சம் துளிர்விட ஆரம்பித்தது. தனது கனவனும் மகனும் வரும்வரை காத்திருந்த மல்லிகா எல்லா இடத்திலும் தில்ஹானியைத் தேட ஆரம்பித்தார்.
விடயம் ஆளுக்காள் பரவ முழுக்கிராமமும் ஒன்று பட்டுவிட்டது. எல்லோருமாக சேர்ந்து தேடியும் தில்ஹானியைப் பற்றிய எந்த தகலும் யாருக்கும் கிடைக்கவில்லை. கிணறு, குளம் எதிலும் தவரி விழுந்திருப்பாள் என்று அவற்றிலும் பார்த்தார்கள். அதிலும் பலனில்லை. பெத்தமனம் தவிக்க அழுது புலம்பிக்கொண்டு பொலிஸ் நிலையத்துக்கு ஓடுகிறார்கள். 'மகள் யாருடனாவது ஓடிப் போய் இருப்பாள். சில நாட்களின் பின்னர் வருவாள். அல்லது கோல் எடுப்பாள்' இதுவே பொலிஸாரின் பதிலாக இருந்தது.
யுத்தம் நடைபெற்ற இப்பிரதேசத்தில் சிறுவயதிலேயே பிள்ளைகள் ஓடிப்போவது அனேகமானோருக்கு பழக்கப்பட்டிருந்தது. தில்ஹானியும் இவ்வாறு யாருடனாவது ஒடிப்போய் இருக்கக் கூடும் என கிரமம் பூராகவும் கதை பரவியது. இருந்தபோதும் தில்ஹானியின் காதலன் என்று அனேகர் அறிந்த நிஷாந்த என்பவர் ஊரிலே இருந்தார். பிரகாசமாக இருந்த தில்ஹானியின் குடிசை விளக்கு அணைந்து போய் இருட்டுக்குள் மூழ்கியது போல் இருந்தது. பெத்த மனம் சகோதரப் பாசம் கலை இழைந்துபோய் உள்ளது. தில்ஹானியின் குறும்புத் தனங்கள் வீட்டில் ஆங்காங்கே மல்லிகாவுக்கு தென்பட்டன. அவை தற்போது கனவாகவே போய்விட்டது. இனி தன் மகளைப் பார்ப்போமா மாட்டோமா என்ற ஏக்கம் தில்ஹானியை எந்நேரமும் ஆக்கிரமித்த போதும் ஊரில் தில்ஹானி பற்றி பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.
இவ்வாறு காலச் சக்கரம் சுழண்டு கொண்டிருக்க 2010 ஜுலை மாதம் 05ஆம் திகதி மல்லிகாவின் உறவினர் ஒருவருக்கு தொலைபேசி அலைப்பொன்று வருகிறது. அது தனது மகள் காதலனோடு எங்கேயாவது சந்தோசமாக இருப்பாள் என்ற மல்லிகாவின் எண்ணத்தை தகர்த்தெரிப்பதாகவே இருந்தது. அது யாரையோ கொலை செய்து எறித்து சிறிய வாவியொன்றுக்குள் உடல் பாகங்களை போட்டிருப்பதாக கிடைத்த செய்தியே. பதறிப்போன மல்லிகாவும் கிராம வாசிகளுகம் உடனே சம்பவ இடத்துக்கு விரைகிறார்கள்.
விடயம் உண்மை, பெண் சடலம் ஒன்றின் சேதமடைந்த உறுப்புக்களை கிராமவாசிகள் நீர் நிறைந்த குழியொன்றில் இருந்து கண்டெடுக்கின்றர். அந்த எரிந்த உடலில் இருந்த மோதிரத்தால் சடலத்தை அடையாளம் காண்கிறார்கள். அந்த சடலம் தில்ஹானியுடையது தான். அந்த மோதிரம் தில்ஹானி வயதுக்கு வந்தபோது அவளது அப்பா வாங்கிக் கொடுத்த மோதிரமாகும். பெத்த மனங்கள் இரண்டும் கூனிக் குறுகிப் போய்விட்டன. அவ்விடத்தை அண்டிய பிரதேசத்தை சோதனையிட்ட இளைஞர்கள், அங்கு எதனையோ எரிக்கப்பட்டுள்ளதை அவதானிக்கிறார்கள். அது மட்டுமல்ல அந்த இடத்தில் இரத்தக் கறைகளையும் அவதானித்தார்கள்.
கிராமவாசிகள் தில்ஹானியின் காதலனை சந்தேகித்தனர். அது மட்டுமல்லாது அந்த இளைஞனை அவர்களே பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கின்றனர். ஆனாலும் பொலிஸாரின் கவனயீனத்தால் அவ்விளைஞன் தப்பித்து ஓடுகிறான். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். இதன் காரணமாக அநுராதபுரம் - திருகோணமலை பாதையில் சுமார் 4 மணித்தியாலங்கள் போக்குவரத்து தடைப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இருந்தபோதும் சந்தேக நபர் தப்பித்துச் செல்லும்போதும் மீண்டும் கிராமவாசிகள் சிலர் வான் படையின் உதவியொடு அந்த இளைஞனை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கின்றனர். இதன் பிறகு, தில்ஹானியின் மறைவு தொடர்பான மர்மங்கள் வெளிச்சத்துக்குவர ஆரம்பிக்கின்றன. இந்தச் சம்பவம் இன்றய பல இளம் பெண்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.
பள்ளி வாழ்க்கையில் தேன் பருகிக் கொண்டிருந்த தில்ஹானி அப்போதைக்கும் காதல் வலையில் சிக்கிச் சின்னா பின்னமாகி இருந்தாள். அந்தக் காதல் எவ்வளவு ஆழமானது என்றால், தில்ஹானி அப்போதைக்கும் கன்னிப் பெண் என்ற அந்தஸ்தை இழந்து தாய் என்ற ஸ்தானத்தை அடைந்திருந்தாள். இந்த விடயத்தை யாரிடமும் சொல்லவும் முடியாமல் நீண்டநாள் மறைத்திருக்கவும் முடியாமல் உள்ளுக்குள் தவித்த தில்ஹானி இறுதியில் ஒரு முடிவுக்கு வருகிறாள். அது தனது காதலனுடன் ஒடிப்போய் திருமணம் முடிப்பதாகும்.
தனது பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தில்ஹானி பலகோடி கனவுகளை நெஞ்சில் சுமந்து கொண்டு குடும்ப வாழ்க்கைக்கு அத்திவாரம்போட, காதலனின் கையைப் பிடித்து அவனை நம்பி வீட்டை விட்டு வெளியேறுகிறாள். இருந்தும் அந்தக் கனவுகள் அனைத்தும் இறுதியில் எரிந்து சாம்பலாகி ஒரு உறைக்குள் அடைக்கப்படுகின்றன. அந்த உறைதான் கிராமவாசிகள் நீர் குட்டைக்குள் இருந்து கண்டெடுக்கும் எரிந்து சாம்பலான தில்ஹானியின் சடலம்.
'தில்ஹானி என்னை மாத்திரமல்ல இன்னும் பலபேரைக் காதலித்தாள். அவர்களில் யாருடனாவது அவள் ஒடிப்போய் இருப்பாள்’ என்று ஆரம்பத்தில் கூறிய காதலன், இறுதியில் அனைத்து உண்மைகளையும் பொலிஸாரிடம் கூறுகிறான். திருமணம் செய்து கொள்வதாக தனது நண்பர் ஒருவருடன் தில்ஹானியை அழைத்துக் கொண்டு போகும் சந்தேக நபர் அவளை அழைத்துக் கொண்டுபோவது திருமணம் செய்வதற்கல்ல. அவனுக்குத் தொல்லையாக இருக்கும் தில்ஹானியை தீர்த்துக் கட்டுவதற்காகத்தான்.
சந்தேக நபர் தனது நண்பனுடன் சேர்ந்து தில்ஹானியை வல்லுறவுக்குற்படுத்தி விட்டு, அவளைக் கொலை செய்தது மாத்திரமல்லாது. உடலை எரித்து, எரிந்த உறுப்புக்களை ஒரு உறையில் போட்டு பாழடைந்த நீர் நிரம்பிய குழியொன்றில் போடுகிறார்கள். தில்ஹானியின் விதி என்னவென்று யாருக்கும் தெரியாமல் மண்ணோடு மண்ணாக உக்கிப் போக இருந்ததை முகவரியில்லாமல் வந்த தொலைபேசி அலைப்பு மாற்றியமைத்தது.
இந்த சம்பவம் இன்றைய இளம் யுவதிகளுக்கு மாத்திரமல்ல பெண்ணைப் பெற்ற தாய்மருக்கும் நல்ல பாடமாகவே அமையும். காதலனை நம்பி வீட்டைவிட்டு ஓடும் பெண்கள் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்பட வேண்டும்.