Published On: Saturday, March 03, 2012
கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவை முன்னிட்டு அகதிமுகாமிற்கு சீல்

(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு இந்தியாவில் மண்டபம் அகதிகள் முகாமிற்கு சீல் வைக்கப்பட்டது. கச்சத்தீவில் அந்தோனியார் ஆலய விழா இன்றும் நாளையும் நடக்கிறது. இவ்விழாவில் பங்கேற்க இந்தியாவிலிருந்து 141 படகில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் செல்வதாக இந்திய கடலோர காவற்படை நிலைய கமாண்டிங் அதிகாரி மோரே கூறினார்.
சர்வதேச எல்லையில் வஜ்ரா, கங்காதேவி என இரண்டு ரோந்து கப்பல்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அவசர உதவி, பாதுகாப்பு குறித்து விழாவுக்கு சென்றவர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம். மீனவர்கள் பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்தியுள்ளோம், கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு மீனவர்கள் இன்று காலை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்திய மண்டபம் அகதிகள் முகாமில் அகதிகள் வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டு, சிறப்பு தணிக்கை மேற்கொண்டு ஆட்களை எண்ணும் பணி நடக்கிறது.