Published On: Friday, February 10, 2012
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு மலேரியா நோய்க்காவி காவப்படுகிறது

(நமது செய்தியாளர்)
யாழ். மாவட்டத்தில் மீண்டும் மலேரியா நோய் பரவக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளமையால் பொது மக்கள் இதனையிட்டு விழிப்புடன் செயல்பட வேண்டும் என யாழ். மாவட்ட மலேரியா கட்டப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி இரத்தினசிங்கம் சிவசங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பாக அண்மைக்காலத்தில் இந்தியாவில் இருந்து திரும்புபவர்கள் மற்றும் இந்தியாவுக்கு சுற்றுலாவுக்கு சென்று வருபவர்கள் என்ற பல தரப்பினராலும் இந்நோய்க் காவியை கொண்டுவர முடியம். இந்தியாவில் இன்னும் முற்றுமுழுதாக மலேரியா நோய் கட்டுப்பாட்டக்குள் கொண்டுவரப்படாத நிலமையே காணப்படுகின்றது.
ஆபிரிக்க நாடுகளுக்கு சுற்றலாவுக்காக சென்றவர்கள் அல்லது வேறு காரணங்களுக்காகச் சென்று திரும்பி வருபவர்கள் மூலம் மூளை மலேரியா நோய்க் காவிகளும் கொண்டுவரப்படலாம். குறிப்பிட்ட நாடுகளில் நின்ற வேளைகளில் நோய் தாக்கத்துக்கு உள்ளாகிய நிலையில் சிகிச்சைக்கு உள்ளாகியும் திரும்ப நாட்டுக்கே வந்திருக்கலாம். இத்தகையவர்கள் மூலம் மிண்டும் நாட்டில் மலேரியா நோயின் தாக்கம் பாதிப்பு எற்படக் கூடிய வாய்ப்புகள் காணப்படுவதுடன் ஏனையவர்களும் பாதிப்படையும் நிலமைகூட ஏற்படலாம்.
இத்தகைய நாடுகளுக்குச் சென்று திரும்பியவாகள் சிலர் மலேரியா நோயின் தாக்கத்திற்க்க உள்ளாகிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டும் உள்ளார்கள். ஆகையினால், இத்தகைய நாடுகளுக்குச் சென்று திரும்பியவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்தியதிகாரிகள் பணிமனைகளுடன் தொடர்புகொண்டு தம்மை பரிசோதித்துக்கொள்வது நல்லதெனவும் தெரிவித்துள்ளார்.