Published On: Friday, February 10, 2012
ஜனாதிபதி இன்று பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று பாகிஸ்தானுக்கான உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொள்கின்றார். அந்நாட்டின் ஜனாதிபதி ஆசிப் அல்-சர்தாரியின் விசேட அழைப்பின் பேரில் இவ்விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அங்கு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
2006ஆம் ஆண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியேற்றது முதல் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணமாக பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தார். இது இரு நாடுகளின் நல்லுறவை வலுப்படுத்தியதுடன் பல முக்கிய உடன்படிக்கைகளும் இதன்போது கைச்சாத்தாகின. அத்துடன் 2010ஆம் ஆண்டு நவம்பரில் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸிப் அல்-சர்தாரி இலங்கைக்கான விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.