Published On: Monday, February 13, 2012
'நின்ஜா' பயிற்சிபெறும் ஈரானியப் பெண்கள் (வீடியோ)
ஜப்பானின் பண்டைய நின்ஜா தற்காப்புக் கலையை ஈரானிலுள்ள பெண் வீராங்கனைகளுக்கு தற்போது பயிற்றுவிக்கிறார்கள். இப்பயிற்சியில் தற்போது 3,500 வீராங்கனைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் படி ஏறுதல், காலைத் தூக்கி உதைத்தல், சுவரில் ஏறுதல், எதிராளியைத் தாக்குதல் போன்ற பயற்சிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இப்பயிற்சிகளில் இஸ்லாமிய பாரம்பரிய ஆடையுடன் ஈடுபடுவதும் குறிப்பிடத்தக்கது. 2004ஆம் ஆண்டில், ஈரானிய பெண்கள் ரக்பி அணி ஒன்று உருவாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ஈரானில் 42 சதவீதமான பெண்கள் வேலையின்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

