Published On: Tuesday, February 14, 2012
(இன்ஷாப் முஹம்மட்)
சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் நடமாடும் சேவை பிரஜா பொலிஸ் சேவை பொறுப்பதிகாரி எஸ்.எம்.அமீர் தலைமையில் சம்மாந்துறை மலையடி கிராமம் அல்ஜெனீஸ் வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது.
கெப்சோ அமைப்பின் அனுசரனையுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், கெப்சோ அமைப்பின் பணிப்பாளர் ஏ.ஜே.காமில் இம்றாட், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், உதவி சுகாதார வைத்திய அதிகாரி திலானி விக்ரமசிங்க, பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி ஐ.எல்.எம்.சம்சுதீன், சுப்றா கிராம சேவை உத்தியோகத்தர் எம்.எம். இல்லியாஸ், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தாகள், சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள், ஊர்மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இவ்வைபவத்தில் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் சம்மாந்துறை சுகாதார வைத்திய சேவைகளுடன் பிறப்பு, இறப்பு, திருமண பதிவுகள், பொலிஸ் முறைப்பாட்டுப் பிரதிகள் என்பன பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.