Published On: Monday, February 27, 2012
தர்மபுரியில் 2 தலையுடன் அதிசய கன்றுக்குட்டி

தர்மபுரி ஏமகுட்டியூர் கிராமத்தில் 2 தலையுடன் அதிசய கன்றுக்குட்டி பிறந்தது. தர்மபுரி ஏமகுட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன்(35). விவசாய கூலிதொழிலாளி. இவர் கால்நடைகள் வளர்த்து வருகிறார். இவர் வளர்க்கும் பசு ஒன்று சினை பிடித்திருந்தது. நேற்று காலை அந்த மாடு 2 தலையுடன் கூடிய கன்றை ஈன்றது. இதுகுறித்த தகவல் கிராம மக்களிடையே பரவியது. ஏராளமானோர் அதிசய கன்றுக்குட்டியை பார்ப்பதற்காக கூடினர்.
அதிசய கன்றுக்குட்டி பிறந்த 2 மணி நேரத்தில் இறந்துவிட்டது. கிராம மக்கள் அந்த கன்றுக்குட்டிக்கு இறுதி சடங்குகளை நடத்தினர். சந்தனம், குங்குமம் வைத்து, மாலை அணிவித்து சடங்குகளை செய்தனர். இதுகுறித்து கால்நடை மருத்துவர் கூறும்போது, ‘‘10 ஆயிரம் கன்றுக்குட்டிகளில் ஒன்று இப்படி அதிசயமாக பிறப்பது உண்டு. அப்படி பிறக்கும் கன்றுகுட்டிகள் நீண்டநேரம் உயிருடன் இருக்காது. உடல் ரீதியாக குறைபாடுடன் பிறக்கும் கன்று குட்டிகள் சிறிது நேரத்தில் இறந்துவிடும்,‘‘ என்றார்.


