Published On: Saturday, March 03, 2012
5 இலங்கை மீனவர்கள் இந்திய கரையோர பாதுகாப்புப் படையினரால் கைது

இலங்கை மீனவர்கள் ஐவர் இந்திய கரையோர பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக மீன்பிடித்திணைக்களம் தெரிவித்துள்ளது. திருகோணமலையில் இருந்து மீன்பிடிக்கச் சென்றவர்கள் சட்ட விரோதமாக இந்திய கடற் பிரதேசத்துக்கு நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திரா பிரதேசத்தில் வைத்து கைதான மேற்படி மீனவர்கள் படகுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு இவர்களை விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் கூறியது. இவர்களுடன் சேர்த்து 10 மீனவர்கள் 2 படகுகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.