எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, March 07, 2012

மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனர் கைது

Print Friendly and PDF


சென்னையில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை உள்ளது. சட்ட விரோதமாக கடத்தப்படும் பொருள்களை பறிமுதல் செய்வது இதன் முக்கிய பணியாகும். இந்த பிரிவில் கூடுதல் இயக்குனராக பணியற்றியவர் ராஜன். ராஜன் மீது சி.பி.ஐ.க்கு ஏராளமான  புகார்கள் சென்றன. இதனையடுத்து, ராஜனை சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். நள்ளிரவில் சாஸ்திரி பவன் வளாகத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து ராஜனும், அவரது கார் டிரைவரும் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். கைதுக்கான காரணம் சென்னையில் பிரபல செல்போன் வியாபாரியான உபயதுல்லா. இவர் வெளிநாடுகளிலிருந்து ஏராளாமான செல்போன் இறக்குமதி செய்து வந்தார். மேலும், ஏற்கனவே இவர் வழக்கு ஒன்றிலும் சிக்கியுள்ளார்.

இதனையடுத்து, உபயதுல்லாவின் வங்கி கணக்கை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை முடக்கியது. இந்த வங்கி கணக்கை மீண்டும் செயல்பட வைக்க கோரி உபயதுல்லா மத்திய வருவாய் புலனாய்வுத்துறை கூடுதல் இயக்குனராக பணியற்றிய ராஜனை அணுகி உள்ளார். அதற்கு ராஜன் இரண்டரை லட்சம் பணமும், மேலும், ஒரு ஐபேடும் தரும்படி கேட்டதாக தெரிகிறது. இதன்படி உபயதுல்லா இரண்டரை லட்சம் பணமும், ஒரு ஐபேடும் எடுத்து கொண்டு ராஜனின் வீட்டுக்கு சென்று உள்ளார். பணத்தையும், ஐபேடையும் ராஜனின் கார் டிரைவரிடம் கொடுத்து உள்ளார். இந்த கொடுக்கல் வாங்கலை கண்காணித்த சி.பி.ஐ. அதிகாரிகள் உபயதுல்லாவை கையும் களவுமாக பிடித்தனர். மேலும், மத்திய புலனாய்வுத்துறை கூடுதல் இயக்குனரான உள்ள ராஜனையும் அவருடைய கார் டிரைவரையும் கைது செய்தனர்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452