Published On: Thursday, March 08, 2012
வவுனியாவில் 'சென் சூ லான் மகாகருணா' தொழிற்பயிற்சி நிலையம்
வட பிரதேசத்தில் தொழில், கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியை அபிவிருத்தி செய்வதை மையமாகக் கொண்ட இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும உள்நாட்டு, வெளிநாட்டு நாடுககள் மற்றும் அரச சார்ப்பற்ற நிறுவனங்களுக்கு செய்த கோரிக்கைகளுக்கு அமைய சிங்கப்பூர் ‘மகா கருணா' அமைப்பினால் வவுனியா பிரதேசத்திற்காக ஒரு தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றை ஆரம்பிப்பதற்காக இரண்டு மாடிகளைக் கொண்டு கட்டிடம் ஒன்றை பெற்றுக்கொடுக்கத் தீர்மானித்துள்ளது.

தற்போது சிங்கப்பூரில் வசிக்கும் கலாநிதி கரத்தடியன குணரத்தின தேரரின் தலைமைத்துவத்தைக் கொண்ட, 'மகா கருணா' புத்தமத அமைப்பினால் இத்தொழில் பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 'சென் சூ லான் மகாகருணா' தொழில் பயிற்சி நிலையம் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள இத்தொழில் பயிற்சி நிலையம் அதற்குரிய கட்டடத்தில் நடைபெறுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்காகக் கைச்சாத்திடப்படும் வைபவம் அண்மையில் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்றது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கலாநிதி கரதட்டியன குணரத்தின தேரோவிற்கும் தொழிற்பயிற்சி அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தம்மிக ஹேவாப்பதிரணவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வவுனியாவிலுள்ள மூன்று முறிப்பு மதவுவைத்துப்புரம் கிராமத்தில் அமைந்துள்ள இக்கட்டிடத்தை இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபைக்காக வழங்குவதின் நோக்கம் வட, கிழக்கு பிரதேசங்களில் வாழும் சிறுவர்களுக்காக தொழில் பயிற்சியினை வழங்கி அவர்களை தேசிய அபிவிருத்தி வேலைத் திட்டத்திற்காக சேர்த்துக்கொள்வதற்காக என்று தெரிவித்த குணரத்தின தேரர் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வாழும் சிறுவர்களின் தொழிற்பயிற்சி கல்வியை அபிவிருத்தி செய்வதற்காக அமைச்சர் டலஸ் அழகப்பெரும் செய்யும் முயற்சிகளை பாராட்டினார்.