எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, March 08, 2012

எரிபொருள் விலையேற்றத்துக்கு நீர்கொழும்பு மாநகரசபை எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு

Print Friendly and PDF


(கலாநெஞ்சன்) 
எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கும் அதன் காரணமாக மக்களின் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமைக்கும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் .


எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த உறுப்பினர்கள் கழுத்தில் கறுப்புப்பட்டி அணிந்திருந்ததுடன், எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர். அத்துடன் அவர்கள் கோசங்களையும் எழுப்பினர். ஆயினும் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் எதிர்க்கட்சியினரை சுலோக அட்டைகளுடன் சபைக்கு செல்லவிடவில்லை. நீர்கொழும்பு மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று முற்பகல் 10 மணிக்கு நடைபெற இருந்த வேளையில் அதற்கு முன்னதாகவே, எதிர்கட்சியினர் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452