Published On: Tuesday, March 06, 2012
காவலாளி இல்லாத தோட்டம்; நயன்தாராவின் நிலை

காவலாளி இல்லாத தோட்டமாகி விட்டது நயன்தாராவின் நிலைமை. வேணும்னா ஆறுதலுக்கு நான் வரவா? என்கிறார்களாம் கோலிவுட் மற்றும் டோலிவுட் ஹீரோக்கள் பலர். இதில் பாதி பேர்கொழுத்த குடும்பஸ்தர்கள் என்பதுதான் பரிதாபம் நம்பர் ஒன்று.
அப்படியே பரிதாபம் நம்பர் ரெண்டு என்னவென்று பார்த்தால் அது இன்னும் ஷாக். கதறி அழும்போது ஒரு கர்சீப்பை நீட்டினாலோ, சுட்டு விரல் கொண்டு துடைத்தாலோ அவர் மீது ஒரு அட்ராக்ஷன் வருமல்லவா? அது வந்து தொலைத்திருக்கிறதாம் நயன்தாராவுக்கு. அதுவும் யார் மீது?
தனது மேக்கப்மேன் மீது! பொதுவாகவே நடிகைகள் தன்னுடைய மேக்கப், காஸ்ட்யூமர்களிடம் ரொம்ப நெருக்கமாக இருப்பார்கள். நடிகை பற்றி உலகத்துக்கே தெரியாத பல ரகசியங்கள் இவர்களுக்கு அத்துப்படியாக இருக்கும். தன்னிடமிருந்து வேலையை விட்டு போனால் கூட இவர்களிடம் நட்பு பாராட்டுவதுடன் செமத்தியாக துட்டும் கொடுத்து வைத்துக் கொள்வார்கள் நடிகைகள். கோடம்பாக்கத்தில் காலகாலமாக நடந்து வரும் இந்த சங்கதிதான் இன்னும் ஒரு ஸ்டெப் மேலேறி காதலாகிவிட்டது என்கிறார்கள்.
இல்லையில்லை, கொடி தவழுதேன்னு தெரிஞ்சா ஆளாளுக்கு கொம்பு நடுவார்கள் என்பதால் அவரே கிளப்பிவிட்ட வதந்திதான் இது என்றும் கூறுகிறார்கள்.
ஆக நயன்தாராவை சுற்றி அடுத்த புயல்.