Published On: Tuesday, March 06, 2012
ரொம்பவே சில்லியான விஷயம் - கண்கலங்கும் காஜல்

இப்போதெல்லாம் எந்த பேட்டியளித்தாலும் பாரதிராஜா பெயரை சொல்லாமல்ஆரம்பிப்பதில்லை காஜல் அகர்வால். (சிங்கம் அடிக்கடி உர்ருங்கறதுதான் காரணம்) பொம்மலாட்டம் படத்தில் நடிக்க வற்புறுத்தி அழைத்து வந்தவர் அவர்தான்.
பொம்மலாட்டம் ஓடாவிட்டாலும் தெலுங்கு இந்தி என்று வடக்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார் காஜல். இடையில் சில காலம் பாரதிராஜாவின் பெயரை காஜல் இருட்டடிப்பு செய்ய, பொங்கி எழுந்தது இமயம். நல்லவேளையாக அவரது கோபத்தை புரிந்து கொண்டவர் அறிமுகப்படுத்தியவரின் பெயரையே பிள்ளையார் சுழியாக்கிக் கொள்ளாத அளவுக்கு புகழ ஆரம்பித்திருக்கிறார்.
காஜல் என்றாலே அந்த நிர்வாண போஸ்தானே நினைவுக்கு வரும்? இப்பவும் இவரை பேட்டி காணும் நிருபர்கள் அந்த பொல்லாத போஸ் பற்றிதான் அதிகம் கேட்கிறார்களாம். முதலில் அது நானே இல்லை என்று மறுத்து வந்த காஜல், இப்போதுதான் உண்மைக்கு பக்கத்தில் வர ஆரம்பித்திருக்கிறார்.
ஜர்னலிசம் இவ்வளவு கீழ்த்தரமா மாறும்னு நான் நினைக்கவே இல்லை. அந்த பத்திரிகை ஷுட்டில் எடுத்த படங்களை என்னிடம் காட்டிவிட்டு பப்ளிஷ் செய்யும்படி கூறியிருந்தேன். குறிப்பிட்ட அந்த படத்தில் நான் ஒரு பஸ்டியரை அணிந்திருந்தேன். அதை கிராப் செய்துவிட்டு போட்டோஷாப்பில் வொர்க் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். அதை பற்றி கவலைப்பட்டு மண்டையை உடைத்துக் கொள்ள மாட்டேன். இது ரொம்ப சில்லியான விஷயம். இனிமேல் ஜாக்கிரதையாக இருப்பேன் என்கிறார் ஆவேசமாக.
உங்கள் மண்டை பத்திரமாக இருக்கட்டும். பாவம், லட்சசோப லட்சம் இளைஞர்களின் மனசுதான் 'டரியல்' ஆகிக் கிடக்கிறது!