எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Monday, May 19, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, March 09, 2012

மே-11 இல் பிரசன்னாவை மணக்கிறார் சினேகா

Print Friendly and PDF


நடிகை சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் சென்னையில், மே மாதம் 11-ந் தேதி திருமணம் நடைபெறுகிறது.

நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் `அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில், முதன்முதலாக ஜோடியாக நடித்தார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் அமெரிக்காவில் நடந்தது. அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, நாளடைவில் காதலாக மாறியது.

இந்த காதலை, இரண்டு பேருமே முதலில் மறுத்து வந்தார்கள். ``நாங்கள் இருவரும் காதலர்கள் அல்ல. நண்பர்கள். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறது'' என்று கூறி வந்தார்கள்.

2 மாதங்களுக்கு முன்பு பிரசன்னா, ``எனக்கும், சினேகாவுக்கும் இடையே காதல் இருப்பது உண்மைதான். நாங்கள் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். எங்கள் இரண்டு பேரின் பெற்றோர்களும் சந்தித்துப்பேசி, திருமணத்தை முடிவு செய்வார்கள்'' என்று காதல்-திருமண அறிவிப்பை வெளியிட்டார்.

அப்போது, சினேகா அமெரிக்காவில் இருந்தார். பிரசன்னாவின் காதல்-திருமண அறிவிப்பை அவர் மறுக்கவில்லை.

அதன் பிறகு சினேகாவும், பிரசன்னாவும் சில நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொண்டார்கள். கடந்த மாதம் (பிப்ரவரி) 14-ந் தேதி காதலர் தினத்தன்று இருவரும் ஜோடியாக போட்டோவுக்கு `போஸ்' கொடுத்தார்கள். காதலுடன், பரிசு பொருட்களை பரிமாறிக் கொண்டார்கள்.

சினேகாவின் பெற்றோர்களும், பிரசன்னாவின் பெற்றோர்களும் சமீபத்தில் சந்தித்துக் கொண்டார்கள். அப்போது, சினேகா-பிரசன்னா திருமணத்தை நிச்சயம் செய்தார்கள். அதன்படி, இருவருக்கும் வருகிற மே 11-ந் தேதி, சென்னை வானகரம் அருகில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில், திருமணம் நடக்கிறது.

திருமணத்துக்கான வேலைகள் இப்போதே தொடங்கி விட்டன. ``திருமணத்துக்குப்பின், சினேகா விரும்பினால் நடிக்கலாம். விரும்பவில்லை என்றால் நடிப்பதை நிறுத்திக் கொள்ளலாம். அதில், நான் தலையிட மாட்டேன். வாழ்க்கை வேறு, தொழில் வேறு என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்'' என்று `தினத்தந்தி' நிருபரிடம் பிரசன்னா தெரிவித்தார்.

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452