Published On: Friday, March 09, 2012
ஷங்கருடன் இணையும் சூர்யா

ஆசாரி குளிச்ச தண்ணியா இருந்தாலும் அரைகிராம் தங்கத்துக்கு சமம் என்பார்கள்ஊர்புறத்தில். உடம்புல படிஞ்ச தங்கத்துக்கே இத்தனை வேல்யூ என்றால், ஒஸ்தியான இருவர் கூட்டு சேர்ந்தால்?
அப்படியொரு விஷயம் கூடிய சீக்கிரம் நடக்க போகிறது. மெகா பட்ஜெட் இயக்குனர் என்று மட்டுமல்ல, மெகா ஹிட் இயக்குனர் என்றும் தமிழகத்தால் கொண்டாடப்படும் ஷங்கர் படத்தில் நடிக்க பலத்த போட்டி நிலவி வருகிறது. உடனடி கால்ஷீட் உள்ளவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கிற மூடில் இருக்கிறார் அவர்.
இந்த நேரத்தில் மாற்றான் படத்தை முடித்துவிட்டு ஷங்கரின் படத்தில் நடித்தால் என்ன என்று நினைக்கிறாராம் சூர்யா. இருவரும் சந்தித்து ஒரு புது விஷயத்தை டீல் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் பரபரப்பு.

