Published On: Tuesday, March 06, 2012
ஜனாதிபதிக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்டு உண்ணாவிரதம்

(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
இலங்கை ஜனாதிபதியை போர் குற்றவாளியாக இந்தியா அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று செவ்வாய்க்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் தா. பாண்டியன் தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தில் உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டார். உண்ணாவிரதத்தில் அ.தி.மு.க.வினரும் திரளாக பங்கேற்றனர்.
அ.தி.மு.க. சார்பில் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன், சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. கே.பி.கந்தன், பல்லாவரம் எம்.எல்.ஏ. தன்சிங், பல்லாவரம் நகராட்சி தலைவர் முகமதுநிசார், துணைத் தலைவர் ஜெயப்பிரகாஷ், ஒன்றிய குழு தலைவர் என்.சி.கிருஷ்ணன், பெரும்பாக்கம் ராஜசேகர், பேரூராட்சி தலைவர் சாந்தகுமார், மோகன், சம்பத் உள்பட 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.