Published On: Saturday, March 03, 2012
ஜெனீவா சென்றிருந்த மகிந்த சமரசிங்க நாடு திரும்பினார்

மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக ஜெனீவா சென்றிருந்த அமைச்சர் மகிந்த சமரசிங்க இன்று காலை நாடு திரும்பினார். கடந்த 2 வருடத்திற்குள் இலங்கை அடைந்துள்ள வளர்ச்சி தொடர்பில் ஜெனீவா கூட்டத்தொடரில் கலந்து கொண்டுள்ள பிரதிநிதிகளில் அனேகமானோர் மகிழ்ச்சி அடைந்ததாக அமைச்சர் விமான நிலையத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.