Published On: Wednesday, March 07, 2012
ஓட்டமாவடியில் புதிய பிரதேச சபை உறுப்பினர் நியமனம்
(எம்.ரீ.எம்.பாரிஸ்)
2010இல் நடைபெற்று முடிந்த தேர்தலில் ஓட்டமாவடியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு 1016 வாக்குகளைப் பெற்று 8ஆவது இடத்தைப் பெற்ற எஸ்.ஐ. அன்வர் ஆசிரியர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சி தீர்மானத்திற்கமைய புதிய பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். எம்.சஹாப்தீன் பதவி நீக்கம் செய்யப்பட்டதனை அடுத்தே இப்புதிய பிரதேச சபை உறுப்பினர் நியமனம் வழங்கப்பட்டது.
.jpg)
முன்னாள் அமைச்சரும் தேசிய கைத்தொழில் அதிகா சபை பணிப்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ் சுபைர், ஓட்டமாவடி கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் பிரதி தவிசாளர் ஏ.எம். நௌபர் ஆகியோரின் முன்னிலையில் அண்Zைமயில் மட்/ மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியால பிரதான மன்டபத்தில் இடம்பெற்றது.
.jpg)