Published On: Sunday, March 04, 2012
விடுதலைப் புலிகளை சக்தியூட்டி மீண்டும் செயற்படுத்த அமெரிக்கா முயற்சிக்கிறது

புலிகளின் சர்வதேச வலையமைப்பின் தலைவராக உருத்திரக்குமாரன் செயல்பட்டு வருகின்றார். அமெரிக்கா உருத்திரக்குமாரனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யாமல் இருப்பது ஏன்? அவர் பல பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட ஒரு சர்வதேச குற்றவாளி. அவரின் நிகழ்ச்சி நிரலுக்கே அமெரிக்கா இயங்கி வருகின்றது. அத்துடன் அவருக்கு அமெரிக்கா பாதுகாப்பும் வழங்கி வருகின்றது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அமெரிக்கா, விடுதலைப் புலிகளை மீண்டும் சக்தியூட்டி இலங்கைக்குள் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டை ஆரம்பிப்பதற்கே முயற்சிக்கின்றது. வடக்கில் யுத்தம் நடைபெற்றபோது 3 இலட்சம் தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் மனித கேடயங்களாக வைத்திருந்தபோது இலங்கை இராணுவமே அம்மக்களை மீட்டு பராமரித்து பாதுகாத்தது. அதற்காகவே அமெரிக்கா மனித உரிமை மீறலை இலங்கைக்கு எதிராக கொண்டு வந்துள்ளது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தம்புள்ளையில் நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டமொன்றை திறந்து வைத்த பின்னர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.