Published On: Tuesday, March 06, 2012
அல்போன்சா தற்கொலை முயற்சி; விலகாத மர்மங்கள்

நேற்று காலை செய்தி மிகவும் பரபரப்பானது. எல்லாராலும் அறியப்பட்ட நடிகை அல்போன்சா தூக்க மாத்திரை சாப்பிட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் என்பது முதல் செய்தி. அவரது காதலர் வினோத்குமார் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் என்பது இன்னொன்று.
குரூப் டான்சர் குடும்பம்தான் அல்போன்சாவுக்கு. சுந்தரம் மாஸ்டர், சிவசங்கர் மாஸ்டர் என்று டாப்மோஸ்ட் நடன இயக்குனர்களின் குரூப்பில் ஆடிக் கொண்டிருந்தவர்தான் அல்போன்சாவின் அம்மா. மகளை பெரிய நடிகையாக்க வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருந்தது. ஆனால், அதற்குள் அதைவிட பெரிய ஆஃபர் ஒன்று அல்போன்சாவுக்கு அமைய, திரையுலக பிரவேசத்தை தள்ளிப் போட்டார் அவர்.
அந்த நிர்பந்தம் அல்போன்சாவை சில வருடங்கள் சூழ்ந்திருந்ததாகவும் பிற்பாடு அது மெல்ல விலகியதாகவும் கூறுகிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள். அதற்கப்புறம்தான் பாட்ஷா படத்தின் மூலம் அம்மாவின் ஆசையை நிறைவேற்ற இறங்கினார் அல்போன்சா. வந்த வேகத்திலேயே அவர் காதல் வயப்பட, மொத்த குடும்பமுமே இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
ஆனாலும் தானும் தன் காதலும் வாழ குடும்பத்தையே கூட உதறியெறிய துணிந்தார் அல்போன்சா. இதெல்லாம் பழைய கதை. சினிமாவில் நடிக்காவிட்டாலும் அடிக்கடி கலைசேவை செய்ய வெளிநாடுகளுக்கு சுற்ற ஆரம்பித்தவர், போகிற நேரங்களில் எல்லாம் காதலர் வினோத்குமாரை உடன் அழைத்துச் செல்வதை தவிர்த்தே வந்தாராம். இதன் காரணமாக காதலர்களுக்குள் விவாதமும், வீண் சண்டையும் எழுந்ததாக கூறப்படுகிறது.
நேற்றும் அப்படியே நடந்திருக்கிறது. இதையடுத்து காதலர் வினோத்குமார் து£க்கில் தொங்கி இறந்ததாகவும் துக்கம் தாளாமல் அல்போன்சாவும் உயிரை விட துணிந்ததாகவும் கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் வினோத்குமாரை அடித்தே கொன்றுவிட்டார்கள் என்று அவரது குடும்பத்தினர் கதற ஆரம்பித்திருக்கிறார்கள்.
தற்போதைய நிலவரப்படி அல்போன்சா அபாய கட்டத்தை தாண்டிவிட்டாராம். இனிமேல் நடக்கப் போகும் வழக்கு விசாரணைகள்தான் மிச்ச சொச்ச சந்தேகங்களை தீர்க்க வேண்டும்.