Published On: Tuesday, March 06, 2012
நள்ளிரவில் மாயமான நடிகை அல்போன்சா

காதலன் வினோத்குமார் தற்கொலை செய்ததும் அல்போன்சாவின் வீட்டுக்கு சென்ற வினோத்குமாரின் தந்தை பாண்டியன் மற்றும் உறவினர்கள் தகராறில் ஈடுபட்டனர்.
இதன்பிறகு அவர்களை சமாதானப்படுத்திய போலீசார் அல்போன்சாவிடம் விசாரித்து விட்டு போலீஸ் நிலையம் திரும்பினர். சிறிது நேரம் கழித்து அவரது வீட்டுக்கு மீண்டும் சென்றபோது அவரை காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அக்கம்பக்கத்தில் விசாரித்தனர். உடனடியாக அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து நள்ளிரவில் அல்போன்சாவை தேடி அலைந்த போலீசாருக்கு நள்ளிரவு 2.30 மணியளவில் அவர் தற்கொலைக்கு முயற்சித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது தெரிய வந்தது. அங்கு சென்றும் அவரிடம் விசாரித்தனர்.