Published On: Friday, March 09, 2012
அமெரிக்காவின் தீர்மானம் இலங்கைக்கு எதிரானதல்ல

(ப்ரியா அன்டனி)
ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை மீது அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கே அன்றி இலங்கைக்கு எதிரான தீர்மானம் அல்லவென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இதை அமுல்படுத்துவதில் தோல்வியடைந்ததினாலாயே சர்வதேச சமூகம் இதனை சுட்டிக்காட்டுவதாகவும், இதன் பின்னராவது ஜனாதிபதி தலைமையில் நியமிக்கப்பட்ட மேற்படி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார்.