Published On: Tuesday, March 06, 2012
இலங்கையில் நாளாந்தம் 5 பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகின்றனர்

இலங்கையில் தினசரி 5 பெண்கள் வீதம் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகின்றனர். இவர்களில் மூவர் பருவ வயதை அடையாத சிறுமிகள் ஆவர். கடந்த வருடத்தில் மட்டும் பெண்கள், சிறுமிகள் என 1,165 பேர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். தற்போது என்றுமில்லாதவாறு பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2010ஆம் ஆண்டில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 1,054 முறைப்பாடுகளும் 2011ஆண்டின் 11 மாத காலப் பகுதிக்குள் 1,636 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.