Published On: Thursday, March 01, 2012
பசில் ராஜபக்ஷ தலைமையில் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்
(ஐ.எம்.பாயிஸ்)
அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தலைமையில் அம்பாறை மாவட்ட செயலகத்தில் செவ்வாய்கிழமை இடம்பெற்றது. இந்த அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, பைசால் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், பி.எச்.பியசேன உட்பட திணைக்கள தலைவர்களும் கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு ஊருக்குமான அபிவிருத்தி எனும் அரசின் திட்டத்துக்கு அமைவாக ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைக்கு அமைவாக மாவட்டத்தின் அனைத்து கிராமங்களுக்குமான வேலைத்திட்டங்களுக்கு இங்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அத்துடன் அனைத்து உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கும் தலா 1 மில்லியன் கொண்ட அபிவிருத்தி வேலை இம்முறை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்படி அபிவிருத்திக் குழுக் கூட்டங்களின் பின்னர் அம்பாறை, கல்முனை, சம்மாந்துறை மற்றும் பொத்துவில் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தனியாக சந்தித்து கலந்துரையாடினார். இந்த நிலையில் பொத்துவில் தொகுதி மக்கள் பிரதிநிதிகளை சந்தித்தபோது, பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலியின் வேலைத்திட்ட முன்மொழிவுகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இதற்கான காரணம் அறியமுடியவில்லை.