Published On: Thursday, March 01, 2012
நீர்ப்பாசனத் திட்டம், விவசாய வீதி அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல்
(சர்ஜுன்)
கடந்த ஒரு தசாப்தமாக யுத்தத்தினால் பாதிப்புற்ற நீர்ப்பாசன விவசாய வீதி அபிவிருத்தி சம்பந்தமாக விவசாய அமைப்புகளுடன் கலந்துரையாடல் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ் உதுமாலெப்பை தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ். செல்வராஜா, கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் புவநாதன், நீர்ப்பாசண பணிப்பாளர் எஸ்.எஸ்.எம்.வீரசிங்க, அக்கரைப்பற்று மாநகர மேயர் அதாஉல்லா ஸக்கி, அக்கரைப்பற்று பிரதேசசபை தவிசாளர் எம்.ஏ.ராசிக், மாகாண பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் யு.எல்.ஏ. நசார், அம்பாரை மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் ஏ.எல்.எம்.அலியார் மற்றும் வீதி அபிவிருத்தி நீர்ப்பாசனம் வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.ஐ. கியாவுதீன் உட்பட உயர் அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
30,000 ஏக்கர் விவசாய காணிகளின் பாதை அபிவிருத்தி நீர்ப்பாசன வசதிகள் ஏற்படுத்தல் சம்மந்தமாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்தோடு 4000 மேட்டுநில பயிர்செய்கையாளர்களின் பிரச்சனைகளுக்கும் தீர்வு எட்டப்பட்டது.