Published On: Thursday, March 01, 2012
மாலைதீவு இளைஞர் விவகார அமைச்சர் இலங்கை வருகை
அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்து மாலைதீவு அரசாங்கத்தில் இளைஞர் விவகாரம் விளையாட்டுத்துறை மற்றும் மனிதவள அமைச்சர் முஹம்மது ஹுசைன் ஷரீப் தனது முதல் இராஜதந்திர வேலையாக அண்மையில் இலங்கையில் இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ டலஸ் அழகப்பெருமவை சந்தித்தார். இச்சந்திப்பு கொழும்பு நாராஹேன்பிட்டியில் அமைந்துள்ள இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பின்போது இலங்கையில் இளைஞர் விவகாரம் மற்றும் திறன்கள் அபிவிருத்தித்துறையில் கடந்த இரண்டு வருடங்களில் ஏற்பட்ட மிகப்பாரிய அபிவிருத்தி பற்றியும் அதில் இலங்கையில் இளைஞர் விவகாரங்களை கட்டியெழுப்புவதற்காக எடுக்கப்பட்டு விதிமுறைகள் மற்றும் திட்டங்களை மாலைதீவு இளைஞர் விவகார அமைச்சர் பாராட்டினார். இதைக்குறித்து கருத்து பறிமாற்றம் மற்றும் மாலைதீவில் இளைஞர் விவகாரங்களை கட்டியெழுப்புவதற்காக இலங்கையில் இளைஞர் விவகார அமைச்சின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் பெற்றுக்கொள்வது இச்சந்திப்பின் நோக்கமாக இருந்தன என்றும் முஹம்மது ஹுசைன் தெரிவித்தார்.
இலங்கையில் இளைஞர்களின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இளைஞர் விவகாரங்களுக்கு சம்பந்தப்பட்ட எல்லா நிருவனங்களை ஒன்றிணைத்து இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு உருவாக்கினார் என்றும் அவரின் ஆலோசனைகளுக்கு அமைய எல்லா செயற்திட்டம் செய்தார் என்றும் தெரிவித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும வரலாற்றிலிருந்து இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் நட்புறவு இருந்ததென்றும் மாலைதீவு இளைமையைக் கட்டியெழுப்புவதற்காக இலங்கை அரசாங்கத்தின் நிரந்தரமான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் மேலும் தெரிவித்தார்.

மாலைதீவு ஜனாதிபதி முஹம்மது நசீட் கடந்த மாதம் 7ஆம் திகதி ஜனாதிபதி பதவியிலிருந்து இராஜினாமா செய்ததன் பின்னர் உப ஜனாதிபதி வஹீட் ஹசன் அவர்கள் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றினார். வஹீட் ஹசன் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கையுமின் அரசியல்கட்சி உள்ளிட்ட மாலைதீவில் எல்லா கட்சிகளும் சேர்த்து புது அரசாங்கத்தை அமைப்பதற்காக நடவடிக்கை எடுத்துள்ளார்.
30 ஆண்டுள் ஆட்சிபுரிந்த அப்துல் கையுமின் இறுதி சில ஆண்டுகளில் பேச்சாளராகவும் பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் 2012 புரட்டாதி மாதம் 12ஆம் திகதி நடைபெறவுள்ள மாலைதீவு அரசாங்கத்தின் தேசிய இளைஞர் வைபவத்தில் பிரதம அதிதியாக பங்குபெறுமாறு இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இச்சந்திப்பில் மாலைதீவிற்கான இலங்கை அரசத் தூதுவர் ஹுசைன் சிஹாப், மாலைதீவு இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் முஹம்மது வஹீட் ஷரீப் ஆகியோரும் கலந்துகொண்டனர்.