Published On: Saturday, March 03, 2012
55 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு உடனடியான இடமாற்றம்

உடனடியாக அமுலுக்குவரும் வகையில் 35 பிரதிப் பொலிஸ் மா அதிபர்களும் 12 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும் 8 பொலிஸ் அத்தியட்சகர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. சேவை, தேவைகளுக்கான இந்த இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. வடக்கு, கிழக்கு உட்பட பிரதான நகரங்களுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் போன்றோரும் இடமாற்றப்பட்டுள்ளனர்.