எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Thuruvam
துருவம்
செய்திகள் • உடனுக்குடன்
THURUVAM
NEWS
MENU
Published On: Sunday, March 04, 2012

அல்-அர்ஹம் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி

Print Friendly and PDF


(சர்ஜுன்) 
அல்-அர்ஹம் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி கல்லுரியின் அதிபர் எம்.ஏ.அன்சார் தலைமையில் நடைபெற்றது. கல்லுாரி வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை கலந்துகொண்டார். விசேட அதிதியாக கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்வில் அமைச்சர் உரையாற்றுகையில் இன்றைய மாணவ சமுதாயமே நாளைய நாட்டின் தலைவர்கள். எனவே கற்றலுடன் சேர்த்து இணைப்பாடவிதானங்களையும் முன்னெடுத்து செல்ல வேண்டும். இதன் ஒரு அங்கமே இந்த விளையாட்டு நிகழ்வாகும் என்றார். அமைச்சர் மேலும் கூறுகையில், இக்கல்லுரி கடந்த சுனாமியால் முற்றாக பாதிப்படைந்து இன்று புதிய இடத்தில் அமையப் பெற்றபோதும் இப்பாடசாலையின் தேவைகள் மேலும் உள்ளன. பாடசாலைக்கான மைதானம் தீர்க்கப்படாத குறையாக இருந்தது.

2009ஆம் ஆண்டு நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டிகளை கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் நடத்தினார்கள் ஏன் என்றால், அந்த இடத்தை மைதானத்திற்கு பொருத்தமான இடமாக அடையாளமிட்டார்கள். இப்பிரதேச வீரர்களே விளையாட்டில் ஆர்வம் காட்டிவருகின்றமையால் மைதனத்தை செப்னிட முதற் கட்டமாக 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளேன். தொடர்ந்தும் நிதி ஒதுக்கப்படும் இப்பிரதேசத்தில் சகல வசதிகளும் கொண்ட மைதானமாக அமைக்க திட்டமிடுங்கள்.

ரஹ்மாணியாபாத் கிராமம் நவீனமயமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தின் இயற்கை ஆற்றில் நீரில் மிதக்கும் விமான இறங்குதுறை அமைக்கப்படவுள்ளது. அண்மையில் இத்திட்டங்களை பார்வையிட கிழக்கு மாகாண பிரதம செயலாளரை அழைத்து வந்து கிராமத்தையும் சுற்று சூழலையும் பார்வையிட்ட பின்னர் நிறைய திட்டங்களை அமுல்படுத்த முடியுமான வளங்கள் காணப்படுகின்றது என்றார்.

பொருளாதார அமைச்சர் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் எதிர்வரும் காலங்களில் அவரையும் அழைத்து வந்து பிரதேசங்களை காண்பிக்கவுள்ளேன். இவை எல்லாம் தேசிய காங்கிரஸின் தலைவர் அமைச்சர் அதாஉல்லாவால் எனக்கு வழங்கப்பட்ட அரசியல் அதிகாரத்தினால் மேற்கொள்ளும் விடயங்களே அன்றி வேறு ஒன்றுமில்லை. அரசியல் அதிகாரம் இல்லாமல் எதையும் நிவர்த்திசெய்ய முடியாது. தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் பல அபிவிருத்திகளை எமது மாவட்டம் காணவுள்ளது. அதிலும் ரஹ்மாணியாபாத் பிரதேசம் உள்ளடக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான விடயம் என்றார். 

நிகழ்வுக்கு விசேட அதிதிகளாக அக்கரைபற்று வலயக் கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாசிம் அமைச்சரின் வெகுசன தொடர்பு அதிகாரி எம்.எஸ்.எம்.ஜௌபர் அட்டாளைச்சேனை கோட்ட கல்வி அதிகாரி என்.கே.எம். இப்றாகிம் பாடசாலை அதிபர்கள் பெற்றோர்களும் சமூகமளித்திருந்தனர்.

போட்டியில் 325 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தை பெற்ற ஹம்தலா இல்லத்திற்கான வெற்றி கேடயத்தினை அமைச்சர் உதுமாலெப்பை வழங்கினார். 260 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட ஹௌகலா இல்லத்திற்கான வெற்றி கேடயத்தை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அசீஸ் அவர்களும் வழங்கி வைத்தார்.







Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452