எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Thuruvam
துருவம்
செய்திகள் • உடனுக்குடன்
THURUVAM
NEWS
MENU
Published On: Monday, March 05, 2012

பெண்கள் இருவரின் தும்புத்தடி சண்டையில் ஒருவர் உயிரிழப்பு

Print Friendly and PDF


பெண் ஒருவரினால் தும்புத்தடியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு மரணமடைந்திருப்பவர் நெலுங்குளம், குடா நெலுங்குளம் பகுதியைச் சேர்ந்த என். அனுலாவதி (வயது 56) என்பவராவார்.

அயல் வீட்டார் ஒருவருடன் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் பிணக்கு முற்றி ஏற்பட்ட கைகலப்பின் போது தும்புத்தடியால் தலைப்பகுதிக்கு பலமாக அடித்ததால் படுகாயமடைந்த நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சைப் பலனின்றி மரணமடைந் துள்ளார்.

இப்பெண்ணின் மீது தாக்குதல் நடத்திய பெண்ணும் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் 64ஆவது வாட்டில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார் என்று வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452