எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, March 11, 2012

சூர்யா மீது தமிழ் மீடியா கோபம்

Print Friendly and PDF


விட்டால் சம்பந்தி பாக்கு வைக்கலையே என்று கூட சங்கடப்படுவார்கள் போலிருக்கிறது. மீடியாவின் கோபத்தைதான் சொல்கிறோம்... தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகிக் கொண்டிருக்கிறது சூர்யா நடிக்கும் 'மாற்றான்' திரைப்படம். வெற்றிப்பட இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார். 

இதுவரை தமிழுக்காக முணுக் கென்று வாயை கூட திறக்காத இவ்விருவரும் படத்தின் ஸ்பெஷல் பிரஸ்மீட்டை ஆந்திராவில் நடத்தி யிருக்கிறார்கள். அதுதான் கோபத்தை கிளப்பியிருக்கிறது இங்கிருக்கும் செய்தியாளர்களுக்கு.

அதுபோகட்டும்... படத்தில் சூர்யா ஒட்டிப்பிறந்த ரெட்டையராக நடிக்கிறாராம். அதில் ஒருவருக்கு காதல் வர, காதலியை அடைய வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் அந்த ஒரு சூர்யா. இருவரையும் பிரிக்கிற ஆபரேஷன் நடக்கிறது. அதில் காதல் சூர்யா 'போய் சேர்ந்துவிட' மற்றொரு சூர்யா காதலை தொடர்கிறார். இந்த விஷயத்தை காதலி கண்டுபிடித்தாளா? திருமணம் நடந்ததா என்று போகுமாம் க்ளைமாக்ஸ்.

முழு கதையையும் இப்படி அம்பலமாக்கினா தமிழ் மீடியாவை புறக்கணிக்காமல் வேறென்ன செய்வாங்களாம்?

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452