Published On: Thursday, March 08, 2012
கல்முனை மாநகர சபையின் மகளிர் தின விழா
(நப்றிஸ்)
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களின் தலைமையில் மகளிர்தின விழா இன்று கல்முனை மாநகர சபையில் கொண்டாடப்பட்டது. பெண்கள் ஒரம் கட்டப்படவேண்டியவர்கள் அல்ல. அவர்கள் ஆண்களுக்கு சமமானவர்கள். தங்களின் உரிமையை பெற்றெடுப்பதற்கு எச்சந்தர்ப்பத்திலும் பின்னிற்க வேண்டிய அவசியம் இல்லை. எதிர்வரும் காலங்களில் இம்மாநகர சபையின் பிரதிநிதிகளாக பெண்களையும் காணவிரும்புகிறேன் என முதல்வர் அவர்கள் தெரிவித்தார்.
இதன்போது மாநகர சபை கணக்காளர், முதல்வரின் செயளாளர் இன்சாட், பதவிநிலை உதவியாளர், மாநகர சபை ஊழியர்கள் உட்பட அனைவரும் கொண்டனர்.

