Published On: Thursday, March 08, 2012
(நப்றிஸ்)
ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக இன்று கொண்டுவரப்பட்ட மனித உரிமை மீறல்கள் குற்றப் பிரேரணையினை எதிர்த்து, அரசுக்கு ஆதரவாக 3000 கையெழுத்துக்களை பெறும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கையெழுத்து வேட்டையை தாய்நாட்டுக்கு எதிராக வெளிநாட்டு சக்திகளை தோற்கடிக்கும் மக்கள் ஆவணம் என்னும் புத்தகத்தில் 'நீங்களும் நாட்டிற்காக இளைஞர் சக்தியுடன் சேருங்கள்' என்ற தொனிப்பொருளில் சாய்ந்தமருது இளைஞர் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது கல்முனை மாநகர சபை முதல்வர் ஸிராஸ் மீராசாஹிப், முதல் கையெழுத்தை இட்டு ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் இளைஞர் நிலயத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர், கிழக்கு மாகாண கணக்ககாளர், சாய்ந்தமருது நிலைய பொறுப்பாளர் மற்றும் இளைஞர் யுவதிகளும் கலந்து கொண்டனர்.