Published On: Thursday, September 08, 2011
டோலிவுட்டில் அமலா பாலுக்கு வரவேற்பு

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி வெற்றி நடைபோட்டுக் கொண்டிருப்பவர் அமலா பால்.
இவர் மைனா மூலம் வெற்றி நாயகியாக வலம் வந்தார். சமீபத்தில் வெளியான தெய்வத்திருமகள் படத்தில் பள்ளி தாளாளராக நடித்து அனைவரையும் பாராட்டையும் பெற்றி அமலா பாலுக்கு நீண்ட நாட்களாகவே ஒரு ஆசை இருந்து வந்தது.
அதுதான் டோலிவுட் ஆசை. எப்படியாவது தெலுங்கு படவுலகில் நுழைந்து அங்கேயும் முன்னணி வெற்றி நாயகியாக வலம் வர வேண்டும் என நினைத்த அமலா, பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசத் தொடங்கியிருக்கிறது.
ஆம் தற்போது முரளி மகன் அதர்வாவுடன் அமலா ஜோடி சோர்ந்த முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தை தெலுங்கிலும் எடுத்து வருகின்றனர். நிரந்தரம் நீ வூகாலே என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் அம்மணி தான் கதாநாயகி.
அமலா பால் தெலுங்குத் திரையுலகிற்கு வருவதையறிந்த தெலுங்கு பட அதிபர்கள் சிலரும் அமலாவை அணுக ஆரம்பித்திருக்கிறார்களாம்.
தனக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்து மிரளாத அமலா, நிரந்தரம் நீ வூகாலே படம் ரீலிஸ் ஆன பிறகுதான் புதிய படங்களில் கமிட் ஆவேன் என்று கூறி வருகிறாம்.
படம் ஹிட் ஆனால் தெலுங்கிலும் ஒரு கை பார்க்கம் திட்டத்தில் இருக்கிறாராம் அமலா பால்.