Published On: Monday, September 26, 2011
கொழும்பு தேர்தல் களத்தில் நிரோஷ்

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் ஊடகவியலாளர் தியாகராஜா நிரோஷ் களமிறக்கப்பட்டுள்ளார். மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியிலேயே இவர் கொழும்பில் இளம் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த தியாகராஜா நிரோஷ் தற்போதைய அரசியல் பிரவேசத்திற்கு முன்பாக தினக்குரல் பத்திரிகை ஆசிரியர் பீடத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் காலப்பகுதியில் (2004) கோப்பாய் பிரதேச செய்தியாளராக நமது ஈழநாடு பத்திரிகையில் இணைந்துகொண்ட இவர் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக வள நிலையத்தில் முதலாவது ழுமுநேர அணியில் தெரிவாகி கல்வி கற்றபோதும் மாணவர்களது உரிமை சார்ந்த செயற்பாடுகளில் அதிக ஆர்வத்தினைக் கொண்டிருந்தமையால் கல்வியை யாழில் தொடர முடியவில்லை. இந் நிலையில் குடாநாட்டில் இருந்து கொழும்புக்கு இடம்பெயர வேண்டியேற்பட்டது. அவ் இடம்பெயர் சூழ்நிலையிலேயே கொழும்பில் பத்திரிகை நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக இணைந்து கொண்டார்.
வடக்கு, கிழக்கு மக்கள் தொடர்பாக வெளிப்படையாகவும் புனை பெயரிலும் தொடர்ச்சியாக கட்டுரைகளை எழுதிவந்தார். அதேவேளை ஞாயிறு தினக்குரல்க்காக பத்திரிகைத்துறையில் அரசியல்வாதிகளையும் சட்டத்துறை மற்றும் அரசியல் மட்டத்தில் உள்ள புத்திஜீவிகளையும் பேட்டிக்கு உட்படுத்தியும் வந்தார்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் காலப்பகுதியில் (2004) கோப்பாய் பிரதேச செய்தியாளராக நமது ஈழநாடு பத்திரிகையில் இணைந்துகொண்ட இவர் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக வள நிலையத்தில் முதலாவது ழுமுநேர அணியில் தெரிவாகி கல்வி கற்றபோதும் மாணவர்களது உரிமை சார்ந்த செயற்பாடுகளில் அதிக ஆர்வத்தினைக் கொண்டிருந்தமையால் கல்வியை யாழில் தொடர முடியவில்லை. இந் நிலையில் குடாநாட்டில் இருந்து கொழும்புக்கு இடம்பெயர வேண்டியேற்பட்டது. அவ் இடம்பெயர் சூழ்நிலையிலேயே கொழும்பில் பத்திரிகை நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக இணைந்து கொண்டார்.
பத்திரிகை நிறுவனத்தில் இரவுநேரக் கடமையாற்றிய வண்ணம் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தினால் நடத்தப்படும் மனித உரிமைகள் மற்றும் சமாதானத்திற்கான டிப்ளோமாவையும் அதே பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தில் ஊடகத்துறை டிப்ளோமாவையும் பெற்றுள்ளதுடன் அரசியல் பொருளாதாரம் தத்துவம் போன்ற பாடங்களை உள்ளடக்கி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டத்திற்கான பரீட்சையிலும்.தோற்றியுள்ளார். மேலும் நல்லாட்சிக்கான ஊடகத்துறை மேம்பாட்டிற்காக அரசசார்பற்ற நிறுவனங்களால் நடத்தப்பட்ட பல்வேறு குறுங்காலப் பயிற்சிகளையும் பத்திரிகையாளரும் வேட்பாளருமான தியாகராஜா நிரோஷ் பூர்த்திசெய்துள்ளார்.
மனித உரிமைகள் மற்றும் அரசியல் சார்ந்த வியங்களுக்காக கொழும்பில் இருந்து வெளியாகும் முன்னணி தமிழ்த் தேசியப் பத்திரிகையில் தொடர்ச்சியாக கட்டுரைகள் வாயிலாகவும் அரசியல் பேட்டிகள் வாயிலாகவும் குரல்கொடுத்து வந்த பத்திரிகையாளர் ஒருவரது அரசியல் களமிறக்கம் என்பது தமிழ் மக்களின் பிரச்சினைகளை அரசியல் தளங்கள் சபைகளுக்குள்ளும் அதற்கு வெளியிலும் எடுச்துச்செல்ல சந்தர்ப்பமாக அமையும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
thiagarajanirosh@gmail.com