Published On: Tuesday, September 27, 2011
ஜீவாவின் சம்பளம் 3 கோடியாக உயர்வு

ஒரு படம் ஓடிவிட்டால் சம்பளத்தை கோடிகளில் உயர்த்துவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதற்கு நடிகர் ஜீவா மட்டும் விதிவிலக்கா என்ன? கோ படம் தாறுமாறாக வெற்றி பெற்றதையடுத்து சம்பளத்தை உயர்த்துவதாக கூறியிருந்தார்.
ஆனால், அதற்கு முன்பு கமிட் ஆன படங்களில் பழைய சம்பளம்தான். இந்நிலையில் கோ படத்திற்கு பிறகு வெளியான ரெளத்திரம், வந்தான் வென்றான் ஆகிய 2 படங்களும் எதிர்பார்த்தளவு வெற்றி அடையவில்லை. ஆனாலும் சம்பள உயர்த்தியது உயர்த்தியது தான் என்று கூறுகிறாராம் ஜீவா.
அடுத்து கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் "நீதானே என் பொன் வசந்தம்" படத்தில் ஒரு கோடி சம்பளமும், மிஸ்கீனின் "முகமூடி"க்கு ஒரு கோடியே 60 இலட்சமும் வாங்கியிருக்கும் அவர், அடுத்ததாக காத்திருக்கும் தயாரிப்பாளர்களிடம் தான் இந்த 3 கோடி சம்பளத்தை சொல்லி தத்தளிக்க விட்டிருக்கிறார்.
அப்படி தத்தளிப்பவர்கள் யார் யார்? ஒருவர் டைரக்டர் ஜனநாதன், மற்றவர் பா.ம.க.வின் முக்கிய செயல் தலைவர்களில் ஒருவரான கோ.க.மணி.