Published On: Tuesday, September 27, 2011
தல, தளபதி குழந்தைகள் நண்பர்களாம்

இளைய தளபதி விஜய்யின் பிள்ளைகளும், அஜீத்குமாரின் மகளும் நெருங்கிய நண்பர்களாம். இருவரும் நெருக்கமாகப் பழகி வருகின்றனர். ஒருவர் வீட்டுக்குச் சென்று ஒருவர் விளையாடி மகிழ்கின்றனர்.
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா ஷாஷாவும், அஜீத் குமார் மகள் அனோஷ்காவும் நண்பர்கள். பாடசாலை விடுமுறை நாட்களில் விஜய் குழந்தைகள் அஜித் வீட்டுக்கு வந்து அனோஷ்காவுடன் விளையாடுகின்றனர். அதுபோல் அனோஷ்காவும் விஜய் வீட்டுக்கு சென்று சஞ்சய், ஷாஷாவுடன் விளையாடுகிறாள்.
அனோஷ்காவை ஷாலினி அழைத்துச் செல்ல, விஜய் குழந்தைகளை அவரது மனைவி சங்கீதா அழைத்து வருகிறார். ஆக மொத்தம் இரண்டு குடும்பங்களும் நட்புறவுட் பழகுகின்றனர்.
மகள் அனோஷ்கா அப்பாவை செல்லமாக அஜீத்குமார் என்றுதான் அழைக்கிறாளாம். இதைக் கேட்டதும் தல உருகிப்போய் விடுகிறாராம். பாசக்கார புள்ளை...