Published On: Tuesday, September 27, 2011
சானியா மிர்சாவுக்கு அறுவைச்சிகிச்சை

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா, தனது முழங்கால் காயத்துக்கு விரைவில் அறுவைச்சிகிச்சை செய்ய உள்ளார்.
சமீபத்தில் நடந்த யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரின் போது, இந்திய வீராங்கனை சானியா மிர்சாவின் முழங்காலில் காயம் ஏற்பட்டது.
இதனால் இவர், தற்போது போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வில் உள்ளார். இவரது கணவரான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சுகைப் மாலிக், தற்போது கராச்சியில் நடக்கும் தேசிய "டுவென்டி-20' சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடி வருகிறார்.
இதனால் சானியா, தனது குடும்பத்தினருடன் பாகிஸ்தான் சென்றார். கராச்சி விமான நிலையம் வந்த இவருக்கு உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. சானியா தன்னுடன் கராச்சியில் தங்குவதற்கு மாலிக் சிறப்பு அனுமதி பெற்றுள்ளார்.
இதுகுறித்து சானியாவின் தந்தை இம்ரான் மிர்சா கூறியதாவது: சானியாவுக்கு ஏற்பட்டுள்ள முழங்கால் காயத்துக்கு மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது கைகொடுக்காத பட்சத்தில், டாக்டரின் ஆலோசனையின் படி முழங்காலில் "ஆப்பரேஷன்' செய்ய உள்ளோம். இவர், விரைவில் குணமடைந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்பார் என எதிர்பார்க்கிறோம். மாலிக்குடன் ஓய்வு நாளை கழித்து வரும் சானியா மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளார். நீண்ட நாட்களுக்கு பின், கராச்சி வந்தது எங்களுக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு இம்ரான் மிர்சா கூறினார்.