Published On: Thursday, October 20, 2011
லிபிய அதிபர் கடாபி கொல்லப்பட்டார்

லிபியா நாட்டின் ஜனாதிபதி கேர்ணல் கடாபி காயமடைந்த நிலையில் தற்போது உயிரிழந்தள்ளதாக அந்நாட்டின் இடைக்கால கவுன்சிலர் தெரிவி்த்துள்ளார். இன்னுமொரு தகவலின்படி காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எந்தத் தகவல்களும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையிலேயே கடாபி இரத்தக் கறையுடன் கூடிய இப்படம் வெளியாகி எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பிண்ணினைப்பு: பிந்திக் கிடைத்த தகவல்களின்படி கடாபி கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிர்தே நகரை அந்நாட்டு இடைக்கால அரச படையினர் கைப்பற்றியதையடுத்து கடாபி கைது செய்யப்பட்டதாகவும், காயம் காரணமாக அவர் பின்னர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொல்லப்பட்ட லிபியா ஜனாதிபதி கடாபி....
கொல்லப்படுவதற்கு முன் வாகனத்திலிருந்து இறக்கப்டுகிறார். (வீடியோ)
கிளர்ச்சியாளர்களால் சித்திரவதைக்கப்பட்டு கொல்லப்படுகிறார்