Published On: Friday, October 21, 2011
சேவையில் புதிதாக 400 பஸ்கள்

இலங்கைப் போக்குவரத்துச் சபை நீண்ட போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதற்காக புதிதாக 400 பஸ்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பஸ்கள் அடுத்த மாதம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் குறிப்பிட்டார்.
குறிப்பிடப்பட்ட 400 பஸ்களும் எதிர்வரும் 2 மாதங்களுக்குள் இறக்குமதி செய்யவுள்ளன. இறக்குமதி செய்யப்படும் புதிய பஸ்களை நீண்டதூர போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.