Published On: Thursday, October 20, 2011
மட்டக்கெளப்பில் பம்மாத்து பஸ் ஸ்டாண்ட்

இப்படித்தான் பாருங்க, நான் அண்டக்கி மட்டக்கௌப்பு பஸ் ஸ்டாண்டுக்கு போனன், கல்முனக்கிப் போவமெண்டு. அங்க இரிக்கிற பஸ் ஸ்டாண்ட் எல்லாம் புதுசாத்தான் இரிக்கி. அங்க எல்லாத்தையும்
சோக்காத்தான் கட்டி இரிக்காங்க. ஆனா, பஸ் போற, வாற டைம் போட்டு இருந்தாங்களே... நானே அதப்பாத்து சோக்காயிட்டன்.
அது கிறிஸ்துவுக்கு முன்னாடி எழுதினதுபோலக் கெடக்கு. எல்லாமே வேற டைம். அதுல இரிக்கிறது ஒரு டைம், பஸ் வாறது போறது ஒரு டைம். அந்த டைம் சும்மா ஒரு பம்மாத்து காட்டத்தான் வெச்சிரிக்காங்க போல... நாம என்னதான் ஆசியாவுல ஆச்சரியமிக்க நாட்டுல இருந்தாலும், இப்படியான அதிசயங்கள் அரச அதிகாரிகளின் கண்களுக்குப் படுதில்ல. பட்டாலும், அவங்களுக்கு என்ன அக்கற? அவங்களுக்கு போற, வாற சரியான டைம் தெரியும்தானே? மக்களப் பத்தி என்ன கவலை?
இடம் மாத்தி வெச்ச சாமான் தொலஞ்சி போனதுக்கு சமன். அப்ப நாம இடம் மாறி பஸ்ல ஏறினா என்ன கத? போசிச்சுப் பாருங்க... பஸ்ஸுல வாறவங்க எல்லாரும் சரியான எடத்துக்கு போவாங்க எண்டும் சொல்ல ஏலாது. ஏனெண்டா எனக்கும் கொஞ்சம் கண் புகைச்சல்தானே. நான் கல்முன எண்டு ஏறாவூருக்குப் போயிட்டன். பஸ்ஸ வெச்சி சம்புளம் வாங்குற அதிகாரிமாரே, இதயும் கொஞ்சம் கவனிக்க மாட்டீங்களா? சீவன் கெடந்தா நான் அடுத்தமுறை தடவி தடவியாவது பஸ் ஸ்டாண்டுக்கு அதப்பாக்க வருவன்.